ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் தான்.. கருணாஸ் புகழாரம்!

by vignesh

நடிகர் சங்கம் சார்பாக மறைந்த விஜயகாந்துக்கு ஜனவரி 19ம் தேதி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கமல்ஹாசன், விக்ரம், கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, நாசர், யோகி பாபு மற்றும் கருணாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விஜயகாந்துக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்த் திருவுருவப் படத்துக்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் பேச ஆரம்பித்த நடிகர் கருணாஸ் சினிமாவில் பெரியண்ணா படத்தில் இருந்தே விஜயகாந்த்துடன் சேர்ந்து பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில், சாதாரண துணை நடிகனாக இருந்து வந்த என்னிடம் வடிவேலு மாதிரி எல்லா படங்களிலும் நடி. உனக்குன்னு ஏதாவது ஒரு படம் ஒரு கேரக்டர் செட்டாகும் என சொல்லி சொல்லி என்னை உயர்த்தியவர் விஜயகாந்த் என கருணாஸ் உருக்கமாக பேசினார்.

புரட்சிக் கலைஞர், கருப்பு எம்ஜிஆர் என கொண்டாடப்பட்ட விஜயகாந்த் தான் ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் என கர்ஜித்து விட்டு நடிகர் கருணாஸ் மேடையில் இருந்து இறங்கி சென்றார் கருணாஸ்.

You may also like

Leave a Comment