‘ கண்ணூர் ஸ்க்வாட்’ Review

by vignesh

ஏஎஸ்ஐ ஜார்ஜ் (மம்முட்டி) தலைமையிலான ஜெயன் (ரோனி டேவிட்), ஜோஸ் (அஜீஸ் நெடுமங்காட்), ஷபி (ஷபரீஷ் வர்மா) அடங்கிய 4 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு விசாரணைக்குழுதான் ‘ கண்ணூர் ஸ்க்வாட்’. பல சிக்கலான வழக்குகளை நேர்த்தியாக புலன் விசாரித்து தீர்வு காணும் இக்குழுவுக்கு கிடைக்கும் பாராட்டும், அளிக்கப்படும் சுதந்திரமும், காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்கே பொறாமையை ஏற்படுத்துகிறது. இந்தக் குழுவில் லஞ்சம் பெற்ற செய்தி, ஊடகங்களிலும், சமூக வலைதளத்திலும் பரவ, எதிர்க்கட்சிகள் இப்பிரச்சினையை கையிலெடுக்கிறது. கண்ணூர் ஸ்க்வாட் கலைக்கப்படுகிறது. இந்த நேரத்தில், காசர்கோட்டில் தொழிலதிபர் ஒருவர்  கொல்லப்படுகிறார். அவரது குடும்பத்தினரும் மிக கொடூரமாக தாக்கப்பட்டு, கொள்ளை, பாலியல் வன்கொடுமையும் நிகழ்த்தப்படுகிறது.

காவல் துறை ஜார்ஜ் தலைமையிலான கண்ணூர் ஸ்க்வாட்டை திரும்ப அழைக்கிறது. லஞ்சம் வாங்கியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலரையும் குழுவில் சேர்க்க சம்மதம் தெரிவிக்கப்படுகிறது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பத்து நாட்கள் கெடுவும் விதிக்கப்படுகிறது. தொழிலதிபரை கொன்றது யார்? எதற்காக கொலை செய்யப்படுகிறார்? கொலையாளிகள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்? பத்து நாட்களுக்குள் கன்னூர் ஸ்க்வாட் குழுவினர் கொலையாளிகளை பிடித்தார்களா? இல்லையா? – இதுதான் படத்தின் திரைக்கதை. இந்த படம்  செப்டம்பர் 28-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment