கமலுக்கு அடித்த ஜாக்பாட்… சம்பளத்தை உயர்த்திய விஜய் டிவி!!!

by vignesh

ஹாலிவுட் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது இந்தியாவிலும் பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் விஜய் டிவி தயாரிக்கும் இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதுவரை 6 சீசன்கள் முடிந்துவிட்ட நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களில் 7வது சீசன் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், இந்தாண்டுக்கான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேபோல் இந்தமுறை பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க வாய்ப்பில்லை என செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது அவர் தான் பிக் பாஸ் சீசன் 7 ஹோஸ்ட் எனவும், அதற்கான ப்ரோமோ ஷூட் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த சீசனில் கமல்ஹாசனுக்கு மிகப் பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளதாம்.

இதனால் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு கமல்தான் ஹோஸ்ட் என்பதில் விஜய் டிவி உறுதியாகியுள்ளது. அதன் காரணமாக கமலுக்கு 150 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க முடிவெடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் சென்னை EVP பிலிம் சிட்டியில் பிக் பாஸ் சீசன் 7-க்கான ப்ரோமோ ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. இதில் கமல்ஹாசன் நடித்துள்ளதோடு, விரைவில் நிகழ்ச்சிக்கான கால்ஷீட்டும் கொடுத்துள்ளாராம். இதனால் விரைவில் பிக் பாஸ் சீசன் 7 ப்ரோமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்த சீசன் ஆகஸ்ட் இறுதியிலோ அல்லது செப்டம்பர் மாதமோ தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

Leave a Comment