கமல் ஹாசன் செயலால் கடுப்பில் மணிரத்னம்???

by vignesh

கமல் ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதேபோல் இந்தியன் 2 படத்திலும் நடித்திருக்கிறார். இந்த சூழலில் தக் லைஃப் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது

கமல் ஹாசனும் மணிரத்னத்தும் இணைந்து ஏற்கனவே நாயகன் என்ற கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் இன்றுவரை சிறந்த அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த சூழலில் படத்தின் பூஜையும், டீசர் ஷூட்டிங்கும் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இந்நிலையில் தக் லைஃப் படத்துக்கு புதிய சிக்கல் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதாவது பிக்பாஸ் ஷூட்டை முடிக்க இன்னும் சில நாட்கள் இருக்கின்றன. எனவே அதை முடித்துவிட்டு குட்டி ரெஸ்ட் எடுக்க கமல் ஹாசன் திட்டமிட்டிருக்கிறாராம். அதனால் இந்த மாத இறுதியில் தொடங்குவதாக இருந்த தக் லைஃப் ஷூட்டிங்கை இன்னும் கொஞ்ச நாட்கள் தள்ளி வைக்க மணிரத்னத்திடம் கமல் ஹாசன் கேட்டிருப்பதாகவும்; அதனால் மணிரத்னம் கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

You may also like

Leave a Comment