‘ஜவான்’ ட்ரெய்லர் வெளியீடு???

by vignesh

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘ஜவான்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

படத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாகவும், ஆக்ரோஷமான அப்பாவாகவும் இரண்டு கதாபாத்திரங்களில் ஷாருக்கான் நடித்துள்ளார் என்பதை ட்ரெய்லரின் வாயிலாக தெரிந்து கொள்ளமுடிகிறது. அட்லீ படங்களில் வழக்கமாக இடம்பெறும் ‘ரிச்’ ஆன ஒளிப்பதிவு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இதில் ஒருபடி மேலே இருக்கின்றன என்று சொல்லலாம். ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் பறக்கின்றன.

You may also like

Leave a Comment