ஜவான் படத்துடன் மோதும் அனுஷ்கா ஷெட்டி!

by vignesh

நடிகை அனுஷ்கா ஷெட்டி  எல்லோரும் கவரும் ஹீரோயினாக தென்னிந்திய சினிமாவில் கலக்கி வந்தார்.தற்போது அனுஷ்கா Miss Shetty Mr Polishettyஎன்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.

Miss Shetty  Mr Polishettyபடம் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் படக்குழு ரிலீஸை தள்ளி வைத்துவிட்டது. படத்திற்க்கு எந்த ப்ரோமோஷனும் செய்யாதது தான் காரணம் என சொல்லப்பட்டது. ஆனால் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடியாது தான் காரணம் என தயாரிப்பாளர் கூறினார்.

இந்நிலையில் தற்போது புது ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் அறிவித்து இருக்கிறார். வரும் செப்டம்பர் 7ம் தேதி தான் இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷாருக் கான் நடித்து இருக்கும் ஜவான் படமும் அதே தேதியில் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment