பிரேக் அப் பற்றி பேசிய ஜான்வி கபூர்

by vignesh

நடிகை ஜான்வி கபூர் பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனிகபூரின் மகள். பாலிவுட்டில் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.தென்னிந்தியாவிலும் தற்போது இவர் தெலுங்குப்படத்தில் என்டிஆர் ஜோடியாக கமிட்டாகி நடித்து வருகிறார்.

தென்னிந்திய படங்களிலும் கவனம் செலுத்தி வரும் ஜான்வி,     தற்போது ஜூனியர் என்டிஆருடன் தேவரா படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.இந்நிலையில் அவர் தன்னுடைய நீண்டநாள் காதலருடன் நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அவரது சமீபத்திய பேட்டியில் தன்னுடைய முதல் காதல் குறித்து பேசியுள்ளார். தான் பள்ளி படிக்கும் காலத்தில் ஒருவரை காதலித்ததாகவும் ஆனால் முதிர்ச்சி இல்லாத அந்த வயதில் காதல் ஏற்பட்டதால் சில நாட்களிலேயே இந்தக் காதல் முறிந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இருவருமே காதலை நீட்டிப்பதற்காக தொடர்ந்து பொய் சொல்லி வந்ததாகவும் ஜான்வி கூறியுள்ளார். நேர்மை இல்லாத இந்தக் காதல் அதிக நாட்கள் நீடிக்கவில்லை என்றும் இந்தக் காதல் குறித்து தெரிந்த தன்னுடைய பெற்றோர், படிப்பில் கவனம் செலுத்த ஆலோசனை வழங்கியதாகவும் அதை தான் புரிந்துக் கொண்டு, தன்னுடைய இந்த முதல் காதலை முறித்துக் கொண்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். பஹாரியாவுடனான காதல் குறித்து ஜான்வி பேசுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் குறைந்தபட்சம் அவர் தன்னுடைய முதல் காதல் குறித்தாவது மனம் திறந்துள்ளாரே என சமாதானப்படுத்திக் கொண்டுள்ளனர்.

You may also like

Leave a Comment