‘ஜெயிலர்’ படத்தின் ‘ரத்தமாரே’ லிரிக்கல் வீடியோ வெளியீடு!!!

by vignesh

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் 10-ம் தேதி வெளியாகிறது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகிபாபு, வசந்த் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இந்நிலையில்  ‘ஜெயிலர்’ படத்தின் ‘Rathamaarey’ லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் எழுதியுள்ள பாடலை விஷால் மிஸ்ரா பாடியுள்ளார். தந்தை மகனுக்கும் இடையிலான பாசத்தை சொல்லும் பாடலாக மட்டுமல்லாமல், தாத்தா – பேரனுக்கும் இடையிலான அன்பையும் வெளிப்படுத்துகிறது. மெலடி பாடலான இப்பாடலின், ‘என் முகம் கொண்ட என் உயிரே’, ‘இவனையும் தாண்டி சிறந்தவனே’ போன்ற வரிகள் கவனம் பெறுகின்றன.

You may also like

Leave a Comment