அமெரிக்காவில் வாரிசை முந்திய ஜெயிலர்???

by vignesh
ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் விஜய்யின் வாரிசு பட மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டி பாக்ஸ் ஆபிசில் சாதனை.
இன்று ரிலீஸ் ஆன ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அண்ணாத்த படம் வெளியாகி இரண்டு வருடங்கள் மேல் ஆகும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ஜெயிலர் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் படம் பார்க்க படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் விஜய்யின் வாரிசு படம் மொத்தமாக வசூலித்த தொகையை ஜெயிலர் படம் முதல் நாள் முடிவதற்குள் தாண்டி இருக்கிறது.
வாரிசு மொத்தமாக $1,141,590 வசூலித்து இருக்கும் நிலையில் ஜெயிலர் தற்போது $1,158,000 வசூலித்து இருக்கிறது.

You may also like

Leave a Comment