ஐடி ரெய்டில் விஜயை போட்டுக் கொடுத்த நடிகை த்ரிஷா!!!

by vignesh

தமிழ் சினிமாவில் ஃபேவரைட் ஜோடி என பெயர் எடுத்தவர்கள் விஜய்யும், த்ரிஷாவும். இருவரும் இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட படங்களில் நடித்தனர். இந்த ஜோடி கடைசியாக நடித்து 2008ஆம் ஆண்டு குருவி படம் வெளியானது.அதற்கு பிறகு இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கவில்லை. சூழல் இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் கமிட்டானார் விஜய். இதில் அவருக்கு ஜோடி யார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சர்ப்ரைஸாக த்ரிஷா ஹீரோயினாக கமிட்டானார்.  மீண்டும் இந்த ஜோடி ஒரு பிளாக் பஸ்டர் ஹிட்டை இந்தப் படத்தின் மூலம் கொடுத்தது.

இந்நிலையில் பத்திரிகையாளர் பாண்டியன் விஜய் – திரிஷா குறித்து அளித்த பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் அளித்த பேட்டியில், “திரிஷா வீட்டில் ஒருமுறை ஐடி ரெய்டு நடந்தது. அப்போது வீட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ் ஒன்று இருந்தது. அது எப்படி வந்தது என்று அதிகாரிகள் கேட்டபோது விஜய்தான் வாங்கிக்கொடுத்தார் என்று திரிஷா சொன்னார்”” என பாண்டியன் தெரிவித்தார். தற்போது இந்த விஷயம் விஜய் ரசிகர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 

You may also like

Leave a Comment