விக்ரம் பிரபுவின் இறுகப்பற்று Review !

by vignesh

மித்ரா மனோகர் (ஷ்ரத்தா ஸ்ரீநாத்), திருமண இணையர்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் உளவியல் ஆலோசகர். மித்ராவுக்கும் கணவர் மனோகருக்கும் (விக்ரம் பிரபு) இடையிலான திருமண வாழ்வில் எந்தப் பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக தன் உளவியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி இயல்பாக எழக்கூடிய பிரச்சினைகளைத் தடுத்துவிடுகிறார். அதுவே ஒரு கட்டத்தில் பிரச்சினையாக உருவெடுக்கிறது. மித்ராவிடம் இரு வெவ்வேறு இணையர்கள் ஆலோசனைக்கு வருகிறார்கள்.

ஐடி துறையில் பணியாற்றும் ரங்கேஷ் (விதார்த்) மனைவி பவித்ராவிடம் (அபர்ணதி) விவாகரத்து கேட்கிறார். குழந்தை பிறப்புக்குப் பிறகு பவித்ரா பருமனாகிவிட்டதைக் காரணமாகச் சொல்கிறார். காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இளைஞர்கள் அர்ஜுன் (ஸ்ரீ), திவ்யா (சானியா அய்யப்பன்) இருவருக்கும் தினமும் சண்டை வருகிறது. இருவருக்கும் மண வாழ்க்கையில் தொடர்வது போராட்டமாக இருக்கிறது. இந்த மூன்று இணையர்களும் அவர்களின் மணவாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து எப்படி மீள்கிறார்கள், மனநல ஆலோசகராக மித்ராவின் பங்கு என்ன என்பது மீதிக் கதை.

You may also like

Leave a Comment