பெரும் தொகைக்கு விற்பனையான ‘இந்தியன் 2’ டிஜிட்டல் உரிமை…

by vignesh

கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரூ. 220 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் படம், ‘இந்தியன் 2’. பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லைகா, ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், ‘இந்தியன் 2’ படத்தின் டிஜிட்டல் உரிமை பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் ரூ. 23 கோடிக்கு கைப்பற்றிய நிலையில், தற்போது டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரூ. 220 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

You may also like

Leave a Comment