இளையராஜா பயோபிக்கில் நடிக்க போகும் தனுஷ்…

by vignesh

ஹிந்தியில் தனுஷை வைத்து ஷமிதாப் படத்தை இயக்கிய பால்கி சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “தனுஷ் ரொம்பவே எளிமையானவர். என்ன செய்ய வேண்டுமென்று அவருக்கு நன்றாகவே தெரியும். அவரை இயக்கும்போது ஆம், இல்லை என்பதற்கு தலையை அசைத்தால் போதும் அதை புரிந்துகொண்டு வேறு மாதிரி செய்துகொடுப்பார்.

தனுஷ் நடிகர் மட்டுமில்லை இந்தியாவின் நல்ல எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளரும் கூட. அவருடைய நடிப்புக்கு மட்டும் ரசிகனாக இருந்தேன். இப்போது அவரது எழுத்துக்கும், இயக்கத்துக்கும் ரசிகனாக மாறிவிட்டேன். ஒவ்வொரு முறை அவரை பார்க்கும்போதும் எப்படி இவ்வளவு எளிதாக எழுதுகிறீர்கள் என கேட்பேன். அதற்கு அவரோ இயற்கையாகவே எனக்கு வருகிறது என்பார்.

என்னுடைய கனவு என்பதே இளையராஜாவின் வாழ்க்கை வரலாறை தனுஷை வைத்து இயக்குவதுதான். அப்படி நடக்கும்பட்சத்தில் அவருக்கு நான் கொடுக்கப்போகும் பெரிய பரிசு அதுவாகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் என்னைப்போலவே அவரும் இளையராஜாவின் தீவிரமான ரசிகர்” என்றார். பால்கியின் இந்தப் பேட்டியை பார்த்த சீக்கிரம் இளையராஜா வாழ்க்கை வரலாறை பால்கி எடுக்க வேண்டும் அதில் தனுஷ் நடிக்க வேண்டும் என கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.

You may also like

Leave a Comment