‘ஜப்பான்’ டீசர் எப்படி??

by vignesh

ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

யார் இந்த ஜப்பான்  என்ற அறிமுகத்துடன் டீசர் தொடங்குகிறது. ரூ.200 கோடி பணத்தை கொள்ளையடித்தவர், இந்தியாவில் 180 வழக்குகளை கொண்ட 4 மாநில காவல் துறை தேடும் ஒருவர் என கார்த்தி நடந்து வருகிறார். அவரது ட்ரெஸ்ஸிங் புதுமை. சுனில், விஜய் மில்டன், கே.எஸ்.ரவிக்குமார் நடுவில் வந்து செல்கின்றனர்.

கார்த்தியின் தங்க பற்கள், மிஷின் துப்பாக்கி சர்ப்ரைஸ். ‘எத்தன குண்டு போட்டாலும் இந்த ஜப்பான அழிக்க முடியாதுடா’ என்ற இறுதி வசனம் கவனம் பெறுகிறது.

You may also like

Leave a Comment