மெர்சல் காட்டும் விஜய்யின் GOAT ஸ்குவாட்…

by vignesh

ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் விஜய்யின் தளபதி 68, GOAT – தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது.

GOAT படத்தில் விஜய்யுடன் பெரிய நட்சத்திரக் கூட்டணியே களமிறங்கியுள்ளது. 80களில் கோலிவுட்டை கலக்கிய சில்வர் ஜூப்ளி ஹீரோ மோகன் தான் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அதேபோல், டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், யோகி பாபு, ஜெயராம், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா உள்ளிட்ட பலரும் GOAT படத்தில் நடித்து வருகின்றனர். இவர்களில் பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரின் கேரக்டர் குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இப்போது பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக GOAT படத்தில் இருந்து செம்ம மாஸ்ஸான போஸ்டரை இறக்கியுள்ளது படக்குழு. அதில், விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் ஆகியோர் மெஷின் கன் உடன் செம்ம கெத்தாக போஸ் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற ஹேஷ் டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

You may also like

Leave a Comment