Goat படத்தை வாங்க மறுத்த நிறுவனம்…

by vignesh

தளபதி விஜய் தற்போது Goat படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறார்கள். மாபெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.

விஜய் படம் என்றால், அப்படத்தின் அறிவிப்பு வெளிவந்தவுடனே சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை உள்ளிட்ட மற்ற அனைத்து உரிமைகளும் விற்பனை ஆகிவிடும்.

ஆனால், தற்போது விஜய் படத்திற்கு சோதனை காலம் என்று தான் சொல்ல வேண்டும். Goat படத்தின் ஓடிடி உரிமை இதுவரை விற்பனை ஆகவில்லையாம். இப்படத்தை வாங்க வந்த நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் மிகப்பெரிய தொகை ஒன்றை Goat படக்குழு கூறியுள்ளது. இதனால் ஷாக்கான நெட்பிளிக்ஸ் நிறுவனம் தலைதெறிக்க ஓடிவிட்டார்களாம்.

Goat படத்தின் ஓடிடி உரிமையை எந்த நிறுவனம் கைப்பற்ற போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 

You may also like

Leave a Comment