‘கங்குவா’ க்ளிம்ப்ஸ் ஜூலை 23-ல் வெளியீடு

by vignesh

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வரும் 23-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் படம் ‘கங்குவா’. சூர்யாவின் 42-வது படமாக உருவாகும் இதில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.

இந்த நிலையில், ‘கங்குவா’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வரும் 23-ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளன்று வெளியிட இருப்பதாக ஸ்டுடியோ கிரின் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதற்காக போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கை முழுக்க தழும்புகளுடன் போர்வாளை பிடித்தபடி ஒரு கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. படத்தில் அது சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் ஆக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment