எதிர்நீச்சல் புகழ் காயத்ரி கிருஷ்ணனுக்கு பதில் நடிக்கப்போவது இவரா???

by vignesh

சன் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக எதிர்நீச்சல் என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் படு மாஸான வில்லி போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் காயத்ரி கிருஷ்ணன்.

ஜான்சி ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றுவிட்டார். இனி அந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்களால் வேறு யாரையும் நினைத்து பார்க்கவே முடியாது என்று கூறலாம்.

 

 

இந்த சீரியலை தொடர்ந்து காயத்ரி ஜீ தமிழ் தொடரில் நடித்து வருகிறார். புதியதாக விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட் இருக்கும் கிழக்கு வாசல் தொடரில் நடிப்பதாக இருந்தார்.

ஆனால் தொடரில் இருந்து திடீரென விலகிவிட்டார், காரணம் கால்ஷீட் பிரச்சனை தானாம்.

தற்போது கிழக்கு வாசல் தொடரில் அவருக்கு பதில் யார் நடிப்பார் என பெரிய கேள்வி எழும்பி இருந்தது. அவருக்கு பதில் பிரபல நடிகை தாரணி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment