விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த போகல வெளிய வந்ததும் பார்ட்டியா??? விசித்திராவை விளாசும் ரசிகர்கள்

by vignesh

நடிகை விசித்ரா ரஜினி, வடிவேலு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். ரஜினியுடன் விசித்ரா நடித்த முத்து படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து படங்களில் நடித்த விசித்ரா, திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். தொடர்ந்து நடிப்புக்கு முழுக்கு போட்ட இவர், விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தலை காட்டினார். தொடர்ந்து தற்போது பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியிலும் பங்கேற்று அதிரடியாக செயல்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விசித்ரா, ஏறக்குறைய 100 நாட்களில் நிகழ்ச்சியில் இருந்துள்ளார்.

தொடர்ந்து பைனல் கன்டஸ்டண்டாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வாரத்தில் குறைவான வாக்குகள் பெற்று எலிமினேட் ஆகியுள்ளார் விசித்ரா. முன்னதாக பணப்பெட்டியை இவர் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பூர்ணிமா பணப்பெட்டியுடன் வெளியேறினார். இந்நிலையில் விசித்ராவின் எலிமினேஷன் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்தெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதை தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பார்ட்டி கொண்டாடியுள்ளார் விசித்ரா.

இதனிடையே மறைந்த நடிகர் விஜயகாந்த் உடன் பல்வேறு படங்களில் நடித்த நடிகை விசித்திரா பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் இரங்கல் தெரிவிக்க விஜயகாந்த் வீட்டுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பார்ட்டி கொண்டாடியது பலரையும் முகம் சுளிக்கவைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Ammu Ramachandran (@ammuramachandran)

You may also like

Leave a Comment