‘எதிர்நீச்சல்’ அட்டகாசமான ப்ரோமோ வீடியோ..!

by vignesh

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியலான ‘எதிர்நீச்சல்’ சீரியலானது நாளுக்கு நாள் அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் இந்த சீரியலினுடைய இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.

அதில் குணசேகரன் வீட்டில் உள்ளவர்களிடம் “இந்தப் பத்திரத்தில் கையெழுத்து போடுங்கம்மா” என்கிறார். பதிலிற்கு நந்தினி “நான் இப்போ கையெழுத்துப் போட மாட்டேன் என்றால் என்ன பண்ணுவீங்க” எனக் கேட்கின்றார். அதற்கு ரேணுகா “அவரால எல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது” என்கிறார்.

அதேபோன்று  ஜனனி சக்தியை கையெழுத்துப் போட வேணாம்” என்கிறார். அதுமட்டுமல்லாது குணசேகரனைப் பார்த்து “உங்ககிட்ட பேச பயம் என்று நினைச்சீங்களா” எனவும் கேட்கின்றார். பதிலிற்கு குணசேகரன் “இந்தாம்மா ஏய்” எனக் கூறி மிரட்டுகின்றார்.

அதற்கு நந்தினி “இந்த குணசேகரனோட இன்னொரு முகத்தைப் பார்ப்பீங்க, அதுதானே மாமா” எனக் கேட்கின்றார். நந்தினி குணசேகரனை கலாய்ப்பதைப் பார்த்த ரேணுகா நந்தினிக்கு கை கொடுக்கின்றார்.

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்று உள்ளது .

You may also like

Leave a Comment