“உங்களில் பாதியாக இருப்பேன் அப்பா” துல்கர் சல்மானின் பதிவு

by vignesh

“நிச்சயம் ஒருநாள் உங்களில் பாதியாக இருப்பேன் அப்பா” என நடிகர் மம்மூட்டியின் பிறந்த நாளுக்கு அவரது மகனும் நடிகருமான துல்கர் சல்மான் உருக்கமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் சிறுவனாக இருந்தபோது உங்களைப்போல ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் முதன்முறையாக கேமரா முன்னால் நின்ற போது உங்களைப்போன்ற நடிகனாக வேண்டும் என விரும்பினேன்.  என்றாவது ஒரு நாள் உங்களில் பாதியாக இருப்பேன் என்று நான் நம்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment