எனக்கு வயதாகி விட்டது- துல்கர் சல்மான் ஓபன் டாக்…

by vignesh

நடிகர் துல்கர் சல்மான் இப்போது ‘கிங் ஆப் கோதா’ படத்தில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி, ஷபீர் கல்லரக்கல், செம்பன் வினோத் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம், 24-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் கேங்ஸ்டராக நடித்திருக்கிறார் துல்கர். இந்நிலையில் ரொமான்டிக் ஹீரோவாக இன்னும் தன்னால் தொடர முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “நான் இப்போது நாற்பது வயதை நெருங்கி விட்டேன். இனியும் ரொமான்டிக் ஹீரோவாக நடிக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறேன். அதில் இருந்து அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல நினைக்கிறேன். முதிர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். ‘கிங் ஆப் கோதா’வில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறேன். ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பது மிகவும் கடினம். அதில் நான்கைந்து சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. அந்த கதாபாத்திரமாக, அப்படியொரு இடத்தில் இருப்பதும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment