பிரபல மலையாள நடிகை திவ்ய பிரபா. இவர் தமிழில் கயல், கோடியில் ஒருவன் படங்களில் நடித்துள்ளார். இவர் நேற்று முன் தினம் மும்பையிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் கொச்சிக்குத் திரும்பினார். அப்போது, தனது இருக்கை அருகில் இருத்தவர்கள் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தவறாக நடந்து கொண்டதாகவும் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
கொச்சி போலீஸார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.