ஹிரோயின் போல இருக்கும் இயக்குனர் மிஷ்கினின் மகள்…

by vignesh

இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் கலக்கிவருகிறார் மிஷ்கின். சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் விஜய்யுடன் லியோ, சிவகார்த்திகேயனுடன் மாவீரன் ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். அதேபோல் பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் வணங்கான் படத்திலும் முக்கியமான ரோலை மிஷ்கின் ஏற்றிருக்கிறார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய அவர் இனி இயக்கவேமாட்டாரா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் கிளப்பினர்.

இதற்கிடையே மிஷ்கினுக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார். ஆனால் தனது மனைவியை பிரிந்து பல வருடங்களாக வாழ்ந்துவரும் மிஷ்கின் பேட்டிகளில் தனது மகள் பற்றி நிறையவே பேசியிருக்கிறார். மேலும் வெளிநாட்டில் அவருடைய மகள் படித்துவருவதாகவும் ஒரு தகவல் திரைத்துறையில் உண்டு. இந்நிலையில் மிஷ்கினின் மகள் புகைப்படம் என்று ஒன்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதில் மிஷ்கினுடன் இருக்கும் இளம்பெண் ஆரஞ்சு நிற புடவையில் இருக்கிறார். மிஷ்கின் வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருக்கிறார். இரண்டு பேரும் கோயிலுக்கு முன்பு நின்றுகொண்டிருக்கிறார்கள். இதனை பார்த்த ரசிகர்கள் இவர்தான் மிஷ்கினின் மகளா ஹீரோயினுக்கே போட்டியாக இருக்காங்களே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்

You may also like

Leave a Comment