கார்த்திக் சுப்புராஜுடன் இணையும் விஜய்???

by vignesh

நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியின் மூலம் அடையாளப்பட்டவர் கார்த்திக் சுப்புராஜ். அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அவர் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசனை வைத்து பீட்சா என்ற படத்தை இயக்கினார். பேய் பட ஜானரில் வித்தியாசம் காண்பித்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டாகி முதல் படத்திலேயே பலரது கவனத்தை கார்த்திக் பக்கம் திருப்பியது.

இந்நிலையில் ஜிகர்தண்டா வெளியாகி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதையொட்டி படத்தின் ரீ ரிலீஸ் கொண்டாட்டம் சமீபத்தில் நடந்தது. அப்போது பேசிய கார்த்திக் சுப்புராஜ், “விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எப்போதுமே எனக்கு விருப்பம்தான். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் முடிந்த பிறகு அவரை சந்தித்து கதை கூறுவேன். கண்டிப்பாக அது விஜய்யின் கரியரில் சிறந்த படமாக இருக்கும்” என்றார்.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு அட்லீ இயக்கத்தில் அவர் நடிக்கலாம் என கருதப்படுகிறது. அதேசமயம் தானும் கதை சொல்லப்போவதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருப்பதால் ஒருவேளை 69ஆவது படம் கார்த்திக்கின் கைகளுக்கு போக வாய்ப்புகள் இருக்கின்றனர் என்கின்றனர் திரை ஆர்வலர்கள்.

 

You may also like

Leave a Comment