தனுஷுடன் இணையும் ஹெச் வினோத்…

by vignesh

நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த மூன்று படங்களை இயக்கி மாஸ் காட்டியவர் ஹெச் வினோத். அடுத்தடுத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அஜித் -ஹெச் வினோத் கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தன. தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து KH233 படத்தை இயக்க கமிட்டானார் ஹெச் வினோத், ஆனால் படத்தின் சூட்டிங் தொடர்ந்து தாமதமானது. இதனால் KH233 படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

அடுத்ததாக தனுஷுடன் ஹெச் வினோத் கூட்டணி அமைக்கவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சேகர் கம்முலாவுடன் டி51 படத்தில் நடித்துவரும் தனுஷ், இந்தப் படத்தை தொடர்ந்து ஹெச் வினோத்துடன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

You may also like

Leave a Comment