மாஃபியா கதைக்களத்தில் தனுஷுன் டி51 படம்…

by vignesh

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள டி51 படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியுள்ளது. இந்தப் படத்தில் தனுஷ், நாகார்ஜூனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக நடிகர் நாகார்ஜூனாவின் போர்ஷன்கள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில தினங்களில் இந்தப் படத்தின் சூட்டிங்கில் நடிகர் தனுஷ் இணையவுள்ளார். ராஷ்மிகா மந்தனா. ரொமாண்டிக் படங்களை இயக்கி அதன்மூலம் வரவேற்பை பெற்றுவரும் இயக்குநர் சேகர் கம்முலா இந்தப் படத்தில் மாஃபியா கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார்.

சேகர் கம்முலாவின் இந்த மாறுபட்ட முயற்சி ரசிகர்களின் அதிகமான எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ளது. படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். இந்த காம்பினேஷனும் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. படத்தில் பான் இந்தியா நாயகி ராஷ்மிகா மந்தனா தனுஷிற்கு ஜோடியாகியுள்ள நிலையில் படம் பான் இந்தியா படமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

You may also like

Leave a Comment