தேசிங்கு ராஜா 2 : எழில் இயக்கத்தில் மீண்டும் விமல்

by vignesh

எழில் இயக்கத்தில் விமல், பிந்து மாதவி உள்ளிட்டோர் நடித்து கடந்த 2013ஆம் வருடம் வெளியான திரைப்படம்தான் தேசிங்கு ராஜா. காமெடி ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. இந்நிலையில் அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது. இதிலும் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். பூஜிதா பொனாடாவும், ஹர்ஷிதாவும் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். மேலும் ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வித்யாசாகர் நீண்ட காலத்துக்கு பிறகு இப்படத்துக்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமலின் நடிப்பில் தெய்வ மச்சான், குலசாமி ஆகிய படங்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகின. ஆனால் அந்தப் படங்கள் தோல்வியையே சந்தித்தன.

இதனால் மீண்டும் பழைய இயக்குனருடனே கைகோர்த்து வெற்றிப்படம் ஒன்றை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் நடிகர் விமல்.

You may also like

Leave a Comment