‘டிமான்டி காலனி 2’ முதல் தோற்றம் வெளியீடு…

by vignesh

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் வரவேற்பை பெற்றது.

7 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். அருள்நிதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாம்.சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அருள்நிதி ஹாரர் லுக்கில் இருக்கும் இந்த முதல் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

You may also like

Leave a Comment