தீபிகா படுகோனே-ரன்வீர் சிங் விவாகரத்தா???

by vignesh

காதல் திருமணம் செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன், ரன்வீர் சிங் ஆகியோரும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது தீபிகா படுகோனும் ரன்வீர் சிங்கும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் விரைவில் இருவரும் விவாகரத்து பெறவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று தீயாக பரவி வருகின்றது.

இந்நிலையில் தற்போது அவை யாவும் வெறும் வதந்தி தான் என்பதனை தீபிகா படுகோன் நிரூபித்துள்ளார். அந்தவகையில் நடிகை தீபிகா படுகோன் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில் “நல்ல நண்பரையே காதலித்து திருமணம் செய்து கொள்ளுங்கள், அப்போது தான் உங்கள் வாழ்க்கை நானும் ரன்வீர் சிங்கும் இருப்பது போன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment