தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு டீ-ஏஜிங் டெக்னாலஜி..?

by vignesh

ஜெயிலர்’ படத்தினுடைய பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம்  ரஜினி, லோகேஷ் கனகராஜ் இணையும் ‘தலைவர் 171’ படத்தை தயாரிக்க இருக்கிறது.

இதுவரை இல்லாதவகையில் வித்தியாசமான முறையில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் தலைவர் 171 படம் இருக்கும் என்றும்,   படத்தின் கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய பேட்டியில் கூறியிருந்தார்.

லோகேஷ் கனகராஜ் படங்களில் வழக்கமாக இருக்கும் போதைப்பொருள் குறித்த கதைக்களமாக இல்லாமல் படம் வித்தியாசமான முறையில் இருக்கும் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்தை இளமையாக காட்டும்வகையில் டீ-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment