நிகழ்ச்சி நடக்கும் போது என் ஆடையை மாற்ற சொன்னாங்க!.. டிடி பேட்டி

by vignesh

தொகுப்பாளர் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது திவ்யதர்ஷினி என்கிற டிடி .சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட டிடி, தொகுப்பாளினியாக இருந்த சமயத்தில் தனக்கு நடந்த மோசமான நிகழ்வை பகிர்ந்துள்ளார். ஒருமுறை என்னுடைய நிகழ்ச்சிக்கு ஒரு ஹீரோயின் விருந்தினராக வந்தார். அவர் நிகழ்ச்சிக்கு தாமதமாக தான் வந்தார். அந்த நடிகையின் உடையும் என்னுடைய உடையும் ஒரே மாதிரி இருந்தது.

அப்போது அந்த நடிகை என்னிடம் வந்து, டிடி நீங்க வேற எதும் டிரஸ்  எடுத்து வந்து இருக்கீங்களா? என்று சொன்னார். இதை கேட்டதும் எனக்கும் கஷ்டமாகிவிட்டது.தொகுப்பாளராக இருந்து கொண்டு உனக்கு எதுக்கு இந்த டிரஸ் என்ற கண்ணோட்டத்தில் என்னிடம் பேசினார். இருப்பினும் அந்த நிகழ்ச்சியில் அவரிடம் மரியாதையாக தான் பேட்டி எடுத்தேன் என்று டிடி கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment