குக் வித் கோமாளி சீசன் 4 டைட்டிலை தட்டி தூக்கிய மைம் கோபி!

by vignesh

விஜய் தொலைக்காட்சியில் சீரியல், கேம் ஷோ, ரியாலிட்டி ஷோ என எத்தனையோ நிகழ்ச்சிகள் இருந்தாலும், ரசிகர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சியாக இருக்கிறது குக்வித் கோமாளி நிகழ்ச்சியாகும்.

மூன்று சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், நான்காவது சீசன் ஜனவரி மாதம் தொடங்கி நேற்றோடு நிறைவடைந்துள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் குக்குகளாக ஷெரின், ஸ்ருஷ்டி டாங்கே, விசித்ரா, நடிகர் ராஜ் ஐயப்பா, விஜே விஷால், ஜிகர்தண்டா நடிகர் காளையன், கிஷோர் ராஜ்குமார், ஆன்ட்ரின் நௌரிகட், மைம் கோபி ஆகியோர் இருந்தனர்.

இந்நிலையில்,குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஃபினாலே நிகழ்ச்சி நேற்று 3 மணியில் இருந்து தொடர்ந்து 5 மணி நேரம் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற விசித்ரா, ஸ்ருஷ்டி டாங்கே, ஆண்ட்ரியன், மைம் கோபி, கிரண் மற்றும் ஷிவாங்கி ஆகிய 6 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மைம் கோபி டைட்டிலை தட்டிதூக்கினார். இரண்டாம் இடத்தை ஸ்ருஷ்டி மற்றும் மூன்றாவது இடத்தை விசித்திரா பெற்றுள்ளார்.

டைட்டிலை வென்ற மைம் கோபிக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மைம் கோபிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயிச்சிட்டோம் தம்பிகளா… உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment