சிக்கலில் யோகி பாபு

by vignesh

யோகிபாபு மீது ஹாசிர் என்பவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
யோகிபாபுநெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்தார். அதனைத் தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்திலும் ஹீரோவாக நடித்தார். இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.   ஹீரோவாக நடித்தாலும் காமெடி ரோலிலும் தொடர்ந்து நடித்துவருகிறார். அந்த வகையில் கடைசியாக அவர் மாவீரன் மற்றும் ஜெயிலர் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் யோகிபாபு மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ரூபி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை விருகம்பாக்கத்தில் நடித்துவருகிறார் ஹாசிர். அவர் ஜாக் டேனியல் என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்து யோகிபாபு நடிக்க 65 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசி 20 லட்சம் ரூபாய் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் முன் பணத்தை பெற்றுக்கொண்ட யோகிபாபு ஷூட்டிங் தொடங்கியதும் படப்பிடிப்புக்கு வரமாட்டேன் என கூறியதாக சொல்லப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த ஹாசிர் கொடுத்த பணத்தை கேட்டபோது அதற்கும் யோகிபாபு மறுத்துவிட்டார் என்று விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தாதா என்ற படம் தொடர்பாக யோகிபாபு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment