எகிறும் பட்ஜெட்… விழி பிதுங்கும் தயாரிப்பு நிறுவனம்… அஜித் தான் காரணமா???

by vignesh

விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார் நடிகர் அஜித் குமார் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார்.  ஏற்கனவே அஜர்பைஜானில் நடந்து வந்த ஷூட்டிங் முடிந்த சூழலில் அடுத்தக்கட்ட ஷூட்டிங்கிற்கான லொக்கேஷன் தேடும் பணிகள் மும்முரமடைந்துள்ளன.

இந்நிலையில் சினிமா பத்திரிகையாளரான செய்யாறு பாலு சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், லைகா நிறுவனம் இந்தப் படத்துக்காக போட்டு வைத்திருந்த பட்ஜெட்டைவிடவும் அதிகம் போகிறது போல் தெரிகிறது. இதனாலேயே அந்த நிறுவனம் விழி பிதுங்கி நிற்கிறது. உதாரணமாக ஒரு லைட் ஒன்றை துருக்கியில் வாங்கியிருக்கிறார்கள் படக்குழு. சீனியர் லைட் மேன் ஒருவரும் இப்படத்தில் பணியாற்றுகிறார். அவர் அந்த லைட்டின் விலையை கேட்டிருக்கிறார். விலையை தெரிந்து அதிர்ச்சியான அவர் இந்த விலைக்கு பாதி அவுட்டோர் யூனிட்டையே வாங்கியிருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.

ரசிகர்கள் யாருமே வராத இடத்தில்தான் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்று அஜித் கண்டிஷன் போட்டிருக்கிறார். அது ஏன் என்று தெரியவில்லை. திட்டமிட்ட காலத்துக்குள் படப்பிடிப்பை முடிக்க வாய்ப்பே இல்லை என்றுதான் கருதப்படுகிறது. தயாரிப்பு நிறுவனமோ என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.

You may also like

Leave a Comment