மாவீரன் படம் காப்பியா??? ப்ளூ சட்டை மாறன் விளாசல்…

by vignesh

மாவீரன் படத்தை இயக்கிய் மடோன் அஸ்வினின் இரண்டு படங்களுமே காப்பிதான் என ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார்.

மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா மற்றும் மாவீரன் ஆகிய இரண்டு படங்களுமே காப்பி அடிக்கப்பட்டவை என பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அதன்படி 2008ஆம அண்டு வெளியான ஸ்விங் ஓட் என்ற ஆங்கில படம்தான் மண்டேலா என்றும் 2006ஆம் ஆண்டு வெளியான ஸ்ட்ரேஞ்சர் தென் ஃபிக்‌ஷன் என்ற படம்தான் மாவீரன் படம்” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையே ப்ரியதர்ஷனின் உதவி இயக்குநர் பினு சுப்பிரமணியன் என்பவர் எழுதிய அப்பார்ட்மெண்ட் என்ற கதையைத்தான் பட்டி டிங்கரிங் பார்த்து மாவீரன் படமாக மடோன் அஷ்வின் கொடுத்துவிட்டார் என ஒரு தகவல் வெளியாகி சமீபத்தில் பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதுகுறித்து படக்குழு எதுவும் விளக்கமளிக்கவில்லை.

You may also like

Leave a Comment