Bloody Sweet… லியோ ட்விட்டர் விமர்சனம்…

by vignesh

கைதி படத்தை பார்த்து விட்டு லோகேஷ் கனகராஜை நம்பி மாஸ்டர் படத்தை கொடுத்து லோகேஷ் கனகராஜை இந்த அளவுக்கு உச்சத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் எங்க அண்ணனுக்கு நானும் தரமா செய்வேன் என லோகேஷ் கனகராஜ் செய்துள்ள சம்பவம் தான் லியோ என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தின் முதல் பாதி பட்டாசாக இருப்பதாகவும் இதுவரை பார்த்திராத விஜய்யின் நடிப்பை லியோ படத்தில் ரசிக்கலாம் என பதிவிட்டு வருகின்றனர்.

ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தின் டைட்டில் எப்படி இடைவேளையின் போது போடுவார்களோ அதே போலத்தான் லியோ படத்தின் டைட்டில் இடைவேளையில் தான் போடுகின்றனர் என ரசிகர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.

மாஸ்டர், விக்ரம் படத்தின் இடைவேளை காட்சிகளை விட வேறலெவலில் லியோ படத்தின் ப்ரீ இன்டர்வெல் சீன் ஃபயராக இருக்கிறது என ரசிகர்கள் கொண்டாடி கொளுத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment