ஜெயிலர் டிரைலரை படுமோசமாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!!!

by vignesh

சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன், ஜெயிலர் டிரைலர் குறித்து வீடியோ ஒன்றில் பேசி உள்ளார். அதில், நேற்று ஜெயிலர் படத்தின் டிரைலரை பார்க்க அனைவரும் ஆர்வமாக இருந்தனர். ஆனால், டிரைலரை பார்த்ததும் ரசிகர்கள் தலை தொங்கிவிட்டது.ஏன் என்றால், டிரைலர் படு கேவலமாக இருந்தது.

டிரைலர் தான் ஒரு படத்திற்கு பூஸ்ட் மாதிரி, ஆனால் இந்த டிரைலரில் ரஜினிகாந்தை ஷூ பாலிஷ் போடவைத்து இருக்கிறார் நெல்சன். இனி பேச்சே கிடையாது வீச்சுதான் என ஒரு கையில் துப்பாக்கி, ஒரு கையில் அரிவாளுடன் இருக்கிறார். அது மட்டுமில்லாமல் அந்த டிரைலரில் ரஜினிகாந்தின் முகத்தில் வயசானது தெரிகிறது. எங்க சிங்கம், எங்க வேங்கையை இப்படி கேவலமாக காமிச்சி இருக்கீங்களே இது நியாயமா என்று பயில்வான் டென்ஷனாக பேசினார்.

மேலும், ரஜினிக்கு வயசு ஆகிவிட்டது என்று அனைவருக்கும் தெரியும், இதனால் தான் கார்த்திக் சுப்புராஜ் தனது படத்தில் ரஜினியை இளமையாக காட்டி இருந்தார். ஆனால், நெல்சன் நீங்க72 வயது ரஜினியை 80வயது கிழவன் மாதிரி கேவலமா காட்டி இருக்கிறீர்களே இதுசரியா?

அது மட்டுமில்லாமல் படத்தில் ஷிவராஜ்குமார், மோகன் லால் என பல நடிகர்கள் இருக்கிறார்கள் அவர்களை டிரைலரில் காட்டவே இல்லையே மற்ற நடிகர்களை இருட்டு அடிப்பு செய்யும் படி ரஜினி சொன்னாரா இல்லை சன் பிக்சர்ஸ் சொல்லுச்சா பீஸ்ட் படத்தில் திரைக்கதையை கோட்டை விட்டது போல, டிரைலரிலும் கோட்டைவிட்டுடீங்க நெல்சன் என்று பயில்வான் ரங்கநாதன் டிரைலரை படு மோசமாக விமர்சித்துள்ளார்.

You may also like

Leave a Comment