பவதாரிணியுடன் கடைசியாக எடுத்த போட்டோ-வெங்கட் பிரபு எமோஷ்னல் பதிவு

by vignesh

இளையராஜாவின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் பாடகியாக கலக்கி வந்தவர் தான் பவதாரிணி. சிகிச்சைக்காக இலங்கை சென்றவர் கடந்த ஜனவரி 25ம் தேதி உயிரிழந்தார். பின் அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் அவரது அம்மா மற்றும் பாட்டி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

பவதாரிணி சிகிச்சைக்காக இலங்கை செல்வதற்கு முன் தனது குடும்பத்தினர் அனைவரையும் சந்தித்து பேசிவிட்டு தான் சென்றார் என கூறப்பட்டது.

இந்த நிலையில் வெங்கட் பிரபு ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார். பவதாரிணி அனைவரையும் கடைசியாக சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Venkat Prabhu (@venkat_prabhu)

You may also like

Leave a Comment