லீக்கானது அயலான் பட கதை???

by vignesh

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் அயலான் படத்தில் நடித்துள்ளனர்.அயலான் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார் வரும் 12ம் தேதி ரிலீஸாகிறது.

அயலான் படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அயலான் கண்டிப்பாக ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகும் என்றாலும் படத்தில் சில மைனஸ்கள் இருப்பதும் உறுதியாகியுள்ளது. இந்தியாவில் விவசாயத்தை சீரழிக்க வில்லன் கும்பல் ஒரு ஏலியனை பூமிக்கு அனுப்புகிறது. சிவகார்த்திகேயனிடம் தஞ்சமடையும் அது, பின்னர் வில்லன்களின் சூழ்ச்சியில் இருந்து தப்பித்ததா என்பது தான் கதை.

மேலும் சிவகார்த்திகேயனும் பூமிக்கு வந்த ஏலியனுடன் சேர்ந்து வில்லன்களுடன் மோதுகிறார். இறுதியாக என்ன நடந்தது என்பதை செம்ம ஜாலியான என்டர்டெயினிங் படமாக உருவாகியுள்ளாராம் இயக்குனர். படம் ரிலீஸ்க்கு முன்னர் கதை லீக் ஆனதால் படக்குழுவினர் கலக்கத்தில் உள்ளனர்.

You may also like

Leave a Comment