அயலான் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ்!!!

by vignesh

சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பல தடைகளை கடந்து நேற்று வெற்றிகரமாக வெளியானது. கேஜேஆர் ஸ்டூடியோ தயாரிப்பில் ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான், சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அயலான் முதல் நாளில் 4 முதல் 5 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியான சிவகார்த்திகேயன் படம் அயலான் தான். அதேபோல் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியானாலும் அயலானுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இருப்பினும் முதல் நாள் பாக்ஸ் 4 முதல் 5 கோடி மட்டுமே கலெக்‌ஷன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment