அயலான் வசூல்… மூன்றாவது நாள் பாக்ஸ் ரிப்போர்ட்!

by vignesh

சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12ம் தேதி வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள அயலான், பாக்ஸ் ஆபிஸிலும் நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டுள்ளது.

தற்போது மூன்றாவது நாள் கலெக்‌ஷன் குறித்து தெரியவந்துள்ளது. அதன்படி, நேற்றைய தினம் அயலான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் 5.50 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் மூன்று நாட்களில் மொத்தம் 13 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது அயலான். முதல் நாளை விட அடுத்தடுத்த நாட்களில் அயலான் வசூல் கூடிக் கொண்டே இருப்பதன் மூலம் ரசிகர்களிடம் ஆதரவு அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இதனால் இனிவரும் நாட்களிலும் இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment