அயலான் 2 படப் பணிகள் துவக்கம்…

by vignesh

படம் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது அயலான் படம்.

படம் கடந்த இரு வாரங்களில் சிறப்பான வசூல்மழையை பொழிந்துள்ளது. இதனால் தயாரிப்புத் தரப்பு மிகுந்த உற்சாகமடைந்துள்ளது. படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை அடுத்து படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என்று முன்னதாக இயக்குநர் ரவிக்குமார் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான ஒப்பந்தம் கடந்த சில தினங்களுக்கு முன்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் VFX வேலைகள் முன்னதாகவே துவங்கவுள்ளது.
ரசிகர்களுக்கு சிறப்பான என்டர்டெயின்மெண்டை கொடுத்து பொங்கல் ரேஸில் சிறப்பான இடத்தை பிடித்தது அயலான். இதேபோல அடுத்த பாகமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். ரவிக்குமாருடன் இணைவது குறித்து முன்னதாகவே சிவகார்த்திகேயனும் உற்சாகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment