சாலை விபத்தில் சிக்கிய பிரபல நடிகை??

by vignesh

விஜய் ஆண்டனியின் சைத்தான்,  சமுத்திரக்கனியின் யாவரும் வல்லவரே உட்பட சில படங்களில் நடித்தவர் அருந்ததி நாயர். மலையாளப் படங்களிலும் நடித்து வரும் இவர், திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.

வியாழக்கிழமை இரவு,சாலையில் தனது சகோதரருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.

அடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டனர். அருந்ததி நாயருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

You may also like

Leave a Comment