மிஷன் சாப்டர் 1 பட வெற்றி…சாமி கும்பிட்ட அருண் விஜய்…

by vignesh

ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள மிஷன் சாப்டர் 1 படம் இன்று வெளியானது. ஹாலிவுட் படங்களை நம்ம ஊர் ரசிகர்களுக்கு ஏற்ப இயக்கி வந்த ஏ.எல். விஜய் இந்த படத்திலும் பிரிசன் படங்களில் இருந்து இன்ஸ்பயர் ஆகி இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். அருண் விஜய் இந்த பொங்கலுக்கு வணங்கான் வரவில்லை என்றால் இந்த படத்தை தருகிறேன் என தனது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார். பொங்கல் போட்டி பலமாக உள்ள நிலையில், அருண் விஜய் படத்துக்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து பட இயக்குனர் ஏ.எல். விஜய் மற்றும் அருண் விஜய் ஆகியோர் மதுரை சென்று அங்குள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment