ஆங்கிலப் படம் எடுங்கள் கமலிடம் வேண்டுகோள் விடுத்த இசைப் புயல்…

by vignesh

ஏ.ஆர்.ரஹ்மான் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: சைனீஸ் தியேட்டரில் நாங்கள் ‘ஓப்பன்ஹெய்மர் படத்தைப் பார்த்தோம். நான் அவரை மதிய உணவுக்கு அழைத்திருந்தேன். கடந்த ஆறு தசாப்தங்களாக திரைப்படத் துறையில் இருப்பவர் கமல்ஹாசன். அவர் பேசுவதையும், அவர் சொல்லும் கதைகளைக் கேட்பதும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இப்போதும் அவர் பல படங்கள் பார்க்கிறார். அவற்றிலிருந்து காட்சிகளையும், வசனங்களையும் நினைவு கூர்கிறார். அதுகுறித்த பல தகவல்களையும் எனக்கு சொல்வார். அவரைப் போல எல்லா படங்களையும் முழுமையாக பார்க்கும் பொறுமை எனக்கு இல்லை.

பல ஆண்டுகளாக அவர் இங்கேயே சிக்கிக் கொண்டுவிட்டாரோ என்று எனக்கு தோன்றுகிறது. அது நமக்கு நல்ல விஷயம்தான். ஆனால் அவருக்கு… எனக்கு தெரியவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு, அவரிடம் பணம் இருந்தபோதே, அவர் ஹாலிவுட்டுக்கு சென்று அங்கு ஒரு படம் எடுத்திருக்க வேண்டும்.

வெற்றி தோல்வி குறித்து கவலைப்படாமல் ஒரு பரிசோதனை முயற்சி செய்திருக்க வேண்டும். இப்போதும் அவரால் அதை செய்ய முடியும். அதைத்தான் நான் அவரிடம் சொன்னேன். எதைப் பற்றியும் யோசிக்காமல் ஒரு ஆங்கிலப் படம் எடுங்கள் என்றேன்” என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment