சூர்யா-ஜோதிகா திருமணத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த பரிசு???

by vignesh

சினிமாவில் ஹிட்டடித்த ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைய வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள்.

அப்படி மக்கள் கொண்டாடி இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைய வேண்டும் என ஆசைப்பட்டது சூர்யா-ஜோதிகாவிற்காக தான்.

பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இருந்து காதலிக்க துவங்கிய இவர்கள் அடுத்தடுத்தும் படங்கள் இணைந்து நடித்து வந்தார்கள்.

ரசிகர்கள் இவர்களின் திருமணத்தை காண ஆவலாக இருந்த நேரத்தில் அதாவது 2006ம் ஆண்டு படு கோலாகலமாக இவர்களது திருமணம் நடைபெற்றது.

தற்போது இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

திருமணத்திற்கு முன் நடித்த சில்லுனு ஒரு காதல் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் தான் இசையமைத்தார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற கும்மி அடி என்ற பாடலில் சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் திருமணமாவது போல படமாக்கப்பட்டிருக்கும்.

இந்தப் பாடல் இசையமைக்கும் போது இயக்குநர் கிருஷ்ணாவிடம் இந்தப் பாடல் சூர்யா – ஜோதிகாவின் திருமணத்துக்கு என்னோட பரிசு என ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னாராம்.

 

 

You may also like

Leave a Comment