தளபதி மகனுக்கு வாழ்த்துச் சொன்ன இசைப்புயல் மகன்…

by vignesh

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் வலம் வரும் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயின் 23வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

தளபதி விஜய் ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் சஞ்சய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சினிமா பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

சஞ்சய் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது நண்பரான இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சஞ்சய் உடன் எடுத்துக் கொண்ட பிரத்யேக போட்டோ ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் அடுத்த ஜெனரேஷன் கூட்டணி ஸ்டார்ட் ஆகுது போல என ரசிகர்கள் ஏ.ஆர். அமீனின் வாழ்த்துக்கு கீழ் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment