ஆந்திர சூப்பர் ஸ்டாருக்கு அறுவை சிகிச்சை…

by vignesh

நடிகர் சிரஞ்சீவி நடித்து கடந்த 11-ம் தேதி வெளியான படம், ‘போலா சங்கர்’. இதில் தமன்னா, கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழில் வெளியான ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்கான இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது, நடிகர் சிரஞ்சீவி முழங்கால் வலியால் அவதிப்பட்டதாக நடிகை தமன்னா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவிக்கு முழங்கால் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பின் அவர் அங்கு ஓய்வெடுத்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment