பப்புக்கு செல்வேன்… தொகுப்பாளர் டிடி ஓபன் டாக்…

by vignesh

சின்னத்திரை தொகுப்பாளர்களில் வெகு பிரபலமாக இருப்பவர் திவ்யதர்ஷினி. டிடி என்று ரசிகர்களாலும், செலிபிரிட்டிகளாலும் செல்லமாக அழைக்கப்படும் அவர் விஜய் டிவினியின் ஸ்டார் ஆங்கர்களில் ஒருவர். தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை தன்னுடைய ஜாலியான பேச்சால் போர் அடிக்கமால் நகர்த்தி செல்வதில் வல்லவர் திவ்ய தர்ஷினி. இதனால் அவருக்கென்று தனி ரசிகர்களே இருக்கின்றனர்.

இந்நிலையில் டிடி அளித்த சமீபத்திய பேட்டியில், “பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் பற்றிய என்னுடைய புரிதல் வேறு மாதிரியாக இருந்தது. இப்போது அது மொத்தமாகவே மாறிவிட்டது. திருமணம் செய்துகொள்வது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். திருமணம் ஆனால்தான் வாழ்க்கை முழுமை பெறும் என்றெல்லாம் ஒன்று கிடையவே கிடையாது. திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை.

என்னைப் பற்றி எனக்குதான் முழுமையாக தெரியும். நான் டீன் ஏஜிலேயே அதாவது 14,15ஆவது வயதிலேயே பப்புகளுக்கு, பார்ட்டிகளுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் எனது அம்மா அனுமதிக்கவில்லை. அதேசமயம் எனது அப்பாவோ தைரியமாக என்னை அனுப்பிவைத்தார். நான் குடிக்க மாட்டேன் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. இப்போதுகூட என்னை சுற்றி 100 பேர் குடித்தாலும் நான் குடிக்கமாட்டேன்” என்றார்.

You may also like

Leave a Comment